Offline

LATEST NEWS

எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்: சாய் பல்லவி
Published on 05/11/2024 00:26
Entertainment

இரண்டு கோடி ரூபாய் சம்பளமாகத் தருவதாகக் கூறி முன்னணி அழகுசாதன கிரீம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று விளம்பரத்தில் நடிப்பதற்கு சாய்பல்லவியை அணுகி உள்ளது.

ஆனால், எத்தனை கோடி கொடுத்தாலும் அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என அவர் மறுத்துவிட்டாராம்.

நான் விளம்பரப்படுத்தும் ஒப்பனைப் பொருள்களை நானே பயன்படுத்திப் பார்க்காதபோது அதனால் அதிக பயன் விளையும் என மக்கள் மத்தியில் பொய்யான தகவலைப் பரப்ப விரும்பவில்லை என தான் விளம்பரத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார் சாய் பல்லவி.

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களாக இருந்தாலும் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்தால் அதில் நடிக்க பல நடிகர் நடிகைகள் ஆர்வம் காட்டி வரும் சூழலில், “பணம் முக்கியமல்ல, மக்களின் வாழ்க்கையோடு விளையாட விரும்பவில்லை,” என்று சாய் பல்லவி நாசூக்காக மறுத்துள்ளார்.

Comments