தலைநகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலான சிறார்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளைக்கும் குறைவாக உணவை உண்கின்றனர்.
உணவு விலை, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் குடும்பங்கள் செலவைக் குறைத்துக்கொள்வதே அதற்குக் காரணம்.
விலைவாசி உயர்வாலும் நிதிப் பிரச்சினையாலும் பல குடும்பத் தலைவர்கள் (கிட்டத்தட்ட 40%) நீண்டநேரம் வேலை செய்வதுடன் உணவருந்துவதையும் உணவு அல்லாத மற்ற பொருள்களில் செலவிடுவதையும் குறைத்துக்கொண்டு உள்ளனர்.
கோலாலம்பூரில் 16 குடியிருப்புகளில் வசிக்கும் 755 குறைந்த வருமானக் குடும்பங்களை உள்ளடக்கிய ஐக்கிய நாட்டு நிறுவன ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறார்களில் 52 விழுக்காட்டினர் நாள் ஒன்றுக்கு மூன்று வேளைக்கும் குறைவாக சாப்பிடுகின்றனர். இந்த எண்ணிக்கை கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு 45 விழுக்காடாக இருந்தது.