Offline
மரத்தூள் ஏற்றப்பட்ட டிரெய்லரின் மீது லோரி மோதித் தீப்பிடித்ததில் ஒருவர் மரணம்
Published on 05/15/2024 00:01
News

பெந்தோங்:

லிங்காகரான் தெங்கா உத்தாமா (CSR) என்ற இடத்தில், 18 வயது வாலிபர் ஓட்டிச் சென்ற லோரி, மரத்தூள் ஏற்றப்பட்ட டிரெய்லர் மீது மோதித் தீப்பிடித்ததில், ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், லோரியில் பயணம் செய்த முகமட் காசி அப்துல் ரசாப் (53) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோத்தா பாருவிலிருந்து போர்ட் கிள்ளான் நோக்கிச் சென்ற லோரி, சாலையோரத்தில் நின்ற டிரெய்லர் மீது மோதுவதற்கு முன் கட்டுப்பாட்டை இழந்தது என்று, பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் சைஹாம் முகமட் கஹர் கூறினார்.

டிரெய்லரின் பின்புறத்தில் லோரி மோதியதில், லோரியின் முன்பகுதி முழுவதும் எரிந்தது என்று அவர் சொன்னார்.

 

Comments