கோலாலம்பூர்:
சுயவேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பங்களிக்கும் கலைஞர்களுக்கு, குறிப்பாக திரைப்படத் துறையில் உள்ளவர்களுக்கு, சமூகப் பாதுகாப்பு அமைப்பு (PERKESO) சிறப்பு தரவுத்தளத்தை அமைக்கவுள்ளது.
சொக்சோவிற்கு பங்களிக்கும் கலைஞர்களின் விவரங்களை விரைவாகவும் துல்லியமாகவும் சரிபார்க்க தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS ஐ சொக்சோ தரவுத்தளம் அனுமதிக்கும் என்று, அதன் சுயவேலைவாய்ப்புத் திட்டப் பிரிவுத் தலைவர் முஹமட் ஹரோன் ஓத்மான் கூறினார்.
“சோக்சோ பங்களிப்பு தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்கும், இத்திட்டத்தில் பங்களிக்காதவர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் FINASக்கு சலுகை வழங்குவது தொடர்பில் தாம்எ ஆலோசிப்பதாக அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், FINAS திட்டத்தின் கீழ் பங்களிக்க கலைஞர்களிடமிருந்து தற்போது 1,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், அவை இந்த ஆண்டு இறுதி வரை கட்டம் கட்டமாக பதிவு செய்யப்படும் என்றும் அஸ்மிர் கூறினார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி திரைக்கு பின்னால் உழைக்கும் கலைஞர்களுக்கான சொக்சோ திட்டத்தின் MOU கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.