Offline
காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த முதியவர் கால்வாயில் சடமாக கண்டெடுப்பு
Published on 05/25/2024 05:37
News

ஈப்போ:

காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த முடியவர் ஒருவர், நேற்று மதியம் 2.30 மணியளவில் கம்போங் சுங்கை ராபாட், சுங்கை பிஞ்சியில் உள்ள ஒரு கால்வாயில் முழ்கி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார் என்று ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர்அபாங் ஜைனால் அபிடின் அபாங் அமாட் கூறினார்.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள், குறித்த முதியவர் நீரில் மூழ்கியதால் மரணமடைந்தார் என உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் ஈப்போ மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 05-2542222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments