Offline
சூர்யா 44 படத்தின் டீசர் அப்டேட்
Published on 05/29/2024 01:12
Entertainment

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சூர்யா 44 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 3 நாள்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

சூர்யா அடுத்தடுத்து சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்ஹ்டிக் சுப்பராஜ் இயக்கத்தில் இந்த படத்திலும் நடித்து வருகிறார்.

Comments