Offline
டாக்டர் பஷீர் தலைமையில் நேப்பாளத்தின் அன்னபூர்ணா சிகரத்தை தொட்ட மலேசிய குழு
Published on 05/29/2024 01:27
News

சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு எடுத்துகாட்டாக  நேப்பாளத்தின் அன்னபூர்ணா சிகரத்தை (ABC) டாக்டர் பஷீர் தலைமையிலான மலேசிய குழுவினர் வெற்றிக்கரமாக சென்றடைந்திருக்கின்றனர். 39 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட IM HIKERS குழுவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு பல சிரமங்களுக்கு பின் அவ்விடத்தை சென்றடைந்தனர். இந்த ABC சிகரம் 4,130 மீட்டர்  உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 17ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து  புறப்பட்டு மே 22ஆம் தேதி ABC உச்சியை அடைந்தனர். உலகளாவிய வானிலை மாற்றத்தின் காரணமாக பல சிரமங்களை கடந்து தங்களின் இலக்கை குழு அடைந்ததாக டாக்டர் பஷீர் தெரிவித்தார். இரவில் -4 டிகிரி வரை குளிர் இருந்தது. ஆனாலும் விடா முயற்சியோடு தாங்கள் ABC உச்சியை அடைந்தோம்.

Comments