Offline
ஏப்ரல் மாதத்தில் புரோட்டான் விற்பனை 17.1 விழுக்காடு அதிகரிப்பு
News
Published on 05/29/2024

கோலாலம்பூர்:

கடந்த ஏப்ரல் மாதத்தில் புரோட்டானின் விற்பனை 17.1% அதிகரித்துள்ளது, அதாவது 11,025 கார்கள் விற்பனையாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உள்நாட்டில் அதிகரித்த கேள்வி என்று, தேசிய கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தம் 50,175 கார்களை புரோட்டோன் விற்பனை செய்துள்ளதாகவும், இது 2023 ஆம் ஆண்டில் இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்ட 49,702 கார்களை விட அதிகமாகும் என்றும் அது தெரிவித்துள்ளது.

மலேசிய வாகன சந்தைக்கான மொத்த தொழில்துறை வளர்ச்சியின் அளவு (DIV) ஏப்ரல் மாதத்தில் 59,100 யூனிட்டுகளாகவும், ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 261,345 யூனிட்களாகவும் அதிகரித்துள்ளதாக புரோட்டான் குறிப்பிட்டுள்ளது.

Comments