கோலாலம்பூர்:
KFC நிறுவனம், மலேசியாவில் இயங்கிவந்த 100க்கும் மேற்பட்ட அதன் கிளைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது.
காஸாவில் போர் தொடரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவுடன் தொடர்புடைய வர்த்தகங்களின் பொருள்களைப் புறக்கணிக்கும் போக்கு மலேசியாவில் அண்மை மாதங்களாக நிலவுகிறது.
அதனால், மலேசியாவில் செயல்படும் 108 KFC துரித உணவகக் கிளைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக கூறப்படுகிறது.
கோலாலம்பூரின் ஜாலான் ஈப்போ, ஜாலான் சுல்தான், தாமான் மெலாவதி ஆகிய இடங்களில் உள்ள KFC கிளைகளில் ‘தற்காலிக மூடல்’ குறித்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதைக் காணமுடிவதாகவும் அறியமுடிகிறது.
கோலாலம்பூரின் ஜாலான் ஈப்போவில் உள்ள KFC உணவகத்தின் கதவில் ‘தற்காலிக மூடல்’ குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வடகிழக்கு கிளந்தானில் 21 கிளைகளும் (கிட்டத்தட்ட 80% கிளைகள்) ஜோகூரில் 15 கிளைகளும் சிலாங்கூரில் 11 கிளைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.