Offline
இசையா? பாடலா? என்ற கேள்விக்கு ரஜினியின் பதில்
Published on 05/31/2024 02:03
Entertainment

ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்ததாக ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் ஓய்வுக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அபுதாபிக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். ஒவ்வொரு வருடமும் ரஜினி தான் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மீக பயணமாகஇமயமலை செல்வது வழக்கம்.

அந்த வகையில் ரஜினிஇமயமலைக்கு சுற்றுப் பயணம் செய்வதற்காக இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து 11.30 மணிக்கு விஸ்தாரா விமானத்தில் டெல்லி சென்று அங்கிருந்து இமயமலை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இமயமலையில் நண்பர்களுடன் ஒரு வாரம் தங்கி இருதங்கி இருப்பார் என கூறப்படுகிறது. இமயமலைக்கு புறப்பட்டு செல்லும் முன்பு போயஸ் கார்டனில் அவர் அளித்த பேட்டியில், “ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்வேன். அங்கு பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய இடங்களுக்கு செல்ல இருக்கிறேன். இமயமலையில் 1 வாரம் தங்கியிருப்பேன்” என்றார்.தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:- மன்னிக்கவும். அரசியல் கேள்விகள் வேண்டாமே.

கேள்வி:- தமிழ் சினிமாவில் இசையா? பாடலா? என்ற பிரச்சனை போய் கொண்டிருக்கிறதே?

பதில்:- கை கூப்பியபடி அண்ணா நோ கமெண்ட்ஸ்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments