Offline
நதீஷ் தனபாலன் சாதனை
Published on 05/31/2024 02:07
News

பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் நதீஷ் தனபாலன் மந்தின் இடைநிலைப்பள்ளி, சிரம்பான் வட்டார இடைநிலைப் பள்ளிகளுக்கான 13  முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கான  6 கிலோ மீட்டர் குறுக்கோட்டப் போட்டியில் முதல் நிலையில் வென்று தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

இவ்வெற்றியினைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில அளவிலான குறுக்கோட்டப் போட்டியில் தாம் பயிலும் மந்தின் இடைநிலைப் பள்ளியைப் பிரதிநிதித்து  பங்குகொள்ள விருக்கிறார்.

பாஜம் தமிழ்ப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியிலும் முதல் நிலை வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Comments