Offline
இன்று முதல் நான்காம் ஆண்டு தொடக்கம் படிவம் மூன்று மாணவர்களுக்கு புத்தக வவுச்சர் வழங்கப்படும் – பிரதமர்
Published on 05/31/2024 12:20
News

கோலாலம்பூர்:

நான்காம் ஆண்டு முதல் படிவம் மூன்று வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர் இன்று முதல் கிடைக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

வவுச்சரை எவ்வாறு பெற்றுக்கொள்வது, யார் தகுதியானவர்கள், எங்கு பயன்படுத்தலாம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு தெரியப்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.

“தற்போது அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு நான்காம் ஆண்டு மாணவர்களுடன் இந்த திட்டம் தொடங்குவதாக அவர் சொன்னார்.

“இந்த வவுச்சர்கள் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கற்பித்தல் நிறுவனங்களில் உள்ளவர்களும் பெறத் தகுதியுடையவர்கள்” என்று அவர் நேற்று KL சர்வதேச புத்தகக் கண்காட்சி 2024 ஐத் தொடங்கி வைத்த பின்னர், தனது உரையில் கூறினார்.

Comments