Offline
பல்நோக்கு வாகனம் கால்வாயில் விழுந்ததால் உயிரிழந்த 3 பேர்
Published on 06/02/2024 05:39
News

ஜோகூர் பாரு: சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலையின் Km14.3 இல் உள்ள பள்ளத்தில் இன்று பல்நோக்கு வாகனம் கால்வாயில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். காலை 8.11 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய பெண் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகளான 27 வயது ஆணும் 35 வயது பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜோகூர் பாரு உத்தாரா காவல்துறை துணைத் தலைவர் யூசுப் ஓத்மான் தெரிவித்தார்.

எம்பிவி புக்கிட் இண்டாவிலிருந்து ஜோகூர் பாருவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது அது கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக அவர் கூறினார். பெண் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டொயோட்டா ஆல்பர்ட் கார் சாலையின் இடது பக்கம் 3 மீ ஆழமுள்ள வடிகாலில் விழுந்தது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் இறந்த அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் உள் காயங்களால் இறந்ததாக நம்பப்படுகிறது. ஓட்டுநர் மற்றும் ஆண் பயணி உடன்பிறந்தவர்கள். பெண் பயணி அவர்களின் நண்பராவார்.

Comments