கோலாலம்பூர்:
வட அமெரிக்காவின் மிக உயரமான மலையான அலாஸ்காவில் உள்ள தெனாலி மலையில் ஏறும் போது, மலேசிய மலையேறி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
37 வயதான சுல்கிஃப்லி யூசுப், என்று அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், புதன்கிழமை காலை 6 மணியளவில் கடல் மட்டத்திலிருந்து 19,700 அடி உயரத்தில் உள்ள ”football field” என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் உள்ள பனிக் குகைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்று மலேசிய அல்பைன் டூர் கிளப் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுல்கிஃப்லி மற்றொரு மலையேறியுடன் கடந்த செவ்வாய்கிழமை முதல் தெனாலி மலையில் சிக்கித் தவித்ததாக அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.