Offline
நிச்சயம் மிகப் பெரும் ஹிட் ஆகும் இந்த “ஹிட் லிஸ்ட்” திரைப்படம்; அட போங்க சைக்கோவும் திரில்லரும் கலந்து பின்னிட்டாங்க!
Published on 06/02/2024 05:52
Entertainment

கோலாலம்பூர்:

ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் “ஹிட் லிஸ்ட்” எனும் திரைப்படத்தை நாளை மே 31 ஆம் தேதி மலேசியாவின் பல திரையரங்குகளில் வெளியிடுகிறது MSK Cinemas Sdn. Bhd நிறுவனம். தேர்வு செய்து வெற்றி பெறக்கூடிய படங்களை மட்டும் வெளியிடுவதில் சாணக்கியம் கொண்டவர்கள் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் சாரதா-கலை ஆகியோர்.

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவின் அதிரடியான நடிப்பில் உருவான இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர் முனீஸ்காந்த், நடிகர் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் அயலி படத்தில் பட்டைய கிளப்பிய நடிகை அபி நட்சத்திரா, பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளனர்.

Comments