காசா: இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 9வது மாதமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் All Eyes On RAFAH என்பது டிரெண்டாகி வரும் நிலையில் நடிகை திரிஷா மற்றும் சமந்தா ஆகியோர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தங்களின் இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை போராக இஸ்ரேல் அறிவித்து தொடர்ந்து வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் தற்போது வரை 35 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்த காசா நகரமும் உருக்கலைந்துவிட்டது. காசா நகரில் உள்ள மக்கள் பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதில் பல ஏவுகனைகள் இஸ்ரேலின் தொழில்நுட்பத்துடன் இடைமறிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.
அதோடு சர்வதேச நீதிமன்றமும் போரை நிறுத்த வலியுறுத்தி உள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை கைவிடுவதாக இல்லை. இதற்கிடையே தான் ரஃபாவில் பொதுமக்கள் வசிக்கும் முகாம் எரிந்தது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‛‛பொதுமக்கள் முகாம் மீதான தாக்குதல் என்பது துரதிர்ஷ்டவசமானது” என தெரிவித்துள்ளார். ஆனாலும் இஸ்ரேல் தொடர்ந்து ஹமாசுக்கு எதிராக காசாவில் போரை தொடர்ந்து வருகிறது.