Offline
400 மீட்டர் ஓட்டத்தில் ஷெரின் சாம்சன் புதிய சாதனை!
Published on 06/03/2024 12:55
News

கோலாலம்பூர்:

தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை ஷெரீன் சாம்சன் வல்லபுவாய் 400 மீட்டர் ஓட்டத்தில் 0.1 வினாடிகளில் ஓடி முடித்து மீண்டும் தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

25 வயதான ஈப்போவைச் சேர்ந்த ஷெரின், சனிக்கிழமை (ஜூன் 1) மாலை டென்னசியில் நடந்த மியூசிக் சிட்டி டிராக் கார்னிவலில் 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தை 51.79 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் கடந்த ஆண்டு Mt Sac Relays இல் அவர் பதிவிட்ட 51.80s என்ற அவரது முந்தைய சாதனையை முறியடித்தார்.

இருப்பினும், தகுதியின் அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற, அவர் 50.95 வினாடிகளை கடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவருக்கு வரும் ஜூலை 7 வரை அவகாசம் இருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்களுக்கு கொஞ்சம் மனநிறைவை தருகிறது என்கின்றனர்.

 

Comments