Offline
Menu

LATEST NEWS

நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்: விசாரணை தீவிரம்
Published on 06/03/2024 12:58
Entertainment

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் நடிகர் கருணாஸ் செல்ல இருந்தார். விமான நிலையத்தில் கருணாஸ் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஸ்கேன் செய்த போது, எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பையில் சோதனையிட்டபோது அதில் 40 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பையில் இருந்த 40 துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி உரிமம் தன்னிடம் உள்ளது என ஆவணங்களை அதிகாரிகளிடம் கருணாஸ் காண்பித்துள்ளார். கருணாஸின் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். அவசரமாக வந்ததால், பையில் இருந்த துப்பாக்கி தோட்டாக்கள் பெட்டியை கவனிக்கவில்லை என அதிகாரிகளிடம் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments