Offline
மீண்டும் குமுறிய இந்தோனேசியாவின் மவுண்ட் இபு எரிமலை
News
Published on 06/03/2024

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மவுண்ட் இபு எரிமலை, நேற்று (ஜூன் 2) மீண்டும் குமுறி, 7 கிலோமீட்டர் உயரத்துக்கு சாம்பலைக் கக்கியது. இதன்காரணமாக எரிமலையை அண்டிய பகுதிகளில் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இந்த ஆண்டுத் (2024) தொடக்கத்திலிருந்து இதுவரை இந்த எரிமலை 100க்கும் மேற்பட்ட முறை குமுறியுள்ளது.

ஹல்மகேரா தீவில் அமைந்துள்ள இந்த எரிமலை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது ஆறு நிமிடங்கள் 13 வினாடிகளுக்கு அது விண்ணில் புகையைக் கக்கியதாகக் கூறப்பட்டது. சாம்பல் கலந்த மணலை அது தொடர்ந்து கக்குவதால் உட்புறங்களிலேயே இருக்கும்படி மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதுடன், சுவாசப் பிரச்சினைகளைத் தவிர்க்க முகக்கவசம் அணியும்படிக் குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments