Offline
நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து.. பூமிக்கு கொண்டுவரப்படும் மண்! வரலாற்று சாதனை படைக்கும் சீனா
News
Published on 06/03/2024

பெய்ஜிங்: நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) பகுதியில் சீனாவின் விண்கலம் தரையிறங்கியுள்ளது. இங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டுவர இருக்கிறது. இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு என்கிற பெருமையை சீனா பெறும்.

பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும் கடல் அலையை சீராக வைத்திருப்பதிலும், பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துவதிலும் நிலவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நிலவு குறித்த ஆய்வுகள் தொடக்கத்தில் தீவிரமடைந்திருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இந்த ஆய்வுகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இப்படி இருக்கையில்தான், இந்தியாவின் சந்திரயான் திட்டம் உலக நாடுகளின் கவனத்தை நிலவு பக்கம் திருப்பியது. யாருமே இதுவரை இறங்காத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை இறக்கி இந்தியா உலக சாதனையை படைத்தது. இதனையடுத்து நிலவு மீது ரஷ்யாவும், ஜப்பானும் அடுத்தடுத்து விண்கலன்களை அனுப்பின. ஆனால், இரண்டும் தோல்வியடைந்தது.

இருப்பினும் முயற்சியை கைவிடாமல் நிலவில் அணு உலையை அமைக்க ரஷ்யாவும், சீனாவும் முயன்று வருகின்றன. இது இரு நாடுகளின் கனவு திட்டம். மறுபுறம் சீனா மட்டும் மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. அதாவது, நிலவின் மற்றொரு பகுதியிலிருந்த மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

 

 

 

Comments