கோலாலம்பூர்:
காலை 6.45 மணியளவில் பத்து 9, ஜாலான் லாபு, நீலாயில் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை உட்படுத்திய விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான்.
சம்பவத்தின்போது குறித்த சிறுவன் கம்போங் தேபிங்கில் இருந்து நீலாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுவதாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.
விபத்தின்போது அதே திசையில் இருந்து வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக நம்பப்படுகிறது. இதனால் மேல்நிலைப் பள்ளி மாணவன் தலையில் பலத்த காயம் அடைந்ததாகவும், சம்பவ இடத்திற்கு வந்த நீலாய் சுகாதார கிளினிக்கின் துணை மருத்துவர்களால் குறித்த மாணவன் இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தப் பட்டதாகவும்” அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.