கோலாலம்பூர்:
கடந்த மாதம் பண்டார் மகோத்தா செராஸில் உள்ள ஒரு தனியார் குழந்தை பராமரிப்பு மையத்தில் 17 மாத பெண் குழந்தை அதன் பராமரிப்பாளரால் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
“முதற்கட்ட விசாரணையில், குறித்த குழந்தை பராமரிப்பு மையம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக செயல்பட்துவருவதாகவும், ஆனால், சரியான உரிமம் இல்லாமல் இந்த மையம் இயங்கியதாக போலீசார் சந்தேகிக்கிப்பதாகவும் காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் முகமட் ஜெய்ட் ஹாசன் கூறினார்.
குறித்த சம்பவம் குறித்து கடந்த மே 29 அன்று இரவு 7.36 மணிக்கு சிறுவனின் தந்தை காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக அவர் கூறினார்.