இந்தியாவின் உத்திரப் பிரேதேச மாநிலத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் 33 தேர்தல் ஊழியர்கள் மாண்டனர் என்று மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாண்டவர்களில் பாதுகாவலர்களும் சில துப்புரவுப் பணியாளர்களும் அடங்குவர். மாண்டவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1.5 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.
பல இடங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்ஸியஸைத் தாண்டியுள்ள நிலையில் ஒரே நாளில் வெப்பத்தால் இத்தனை மரணங்கள் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே மாநிலத்தில் உள்ள ஜான்ஸி மாவட்டத்தில் வெப்பநிலை 46.9 டிகிரி செல்ஸியஸை எட்டியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வகம் கூறியது.
கடுமையான வெப்பத்தால் ஒருவரது உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும்போது ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது; அதன் விளைவாக உடலுறுப்புகள் செயலிழந்து போகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.