Offline
இமயமலையில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் சொன்ன தகவல்
Published on 06/05/2024 01:33
Entertainment

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார பயணமாக இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ளார். ரிஷிகேஷ், கேதர்நாத்,பத்திரிநாத் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து ரஜினிகாந்த், பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார். தியானத்தை முடித்து விட்டு் வந்த ரஜினிகாந்திடம் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம்  தேதி வெளியாகிறது. கூலி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என கூறி உள்ளார். இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Comments