Offline

LATEST NEWS

அதிரடியாக துவங்கும் பிக் பாஸ் சீசன்8!
Published on 06/05/2024 01:38
Entertainment

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதுகுறித்தான செய்திகள் இணையத்தில் உலா வரத் தொடங்கி இருக்கிறது.

உலகம் முழுவதும் ஹிட்டடித்த ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழிலும் ஏழு சீசன்களை முடித்திருக்கிறது. இதன் எட்டாவது சீசன் இந்த வருடம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிந்த பின்பு, பிக் பாஸ் சீசன்8 தொடங்க இருக்கிறது. வழக்கம்போலவே, சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில்தான் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவி புகழ் நட்சத்திரங்கள், வெளிநாட்டு மாடல்கள், கிராமப்புற பாடகர்கள், சமூக வலைதளப் பிரபலங்கள், பொதுமக்களுக்கும் வாய்ப்பு என்று கலவையாகதான் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த சீசனிலும் போட்டியாளர்கள் தேர்வு இந்த கேட்டகிரியிலேயே தொடங்கி இருக்கிறதாம்.

விரைவில் போட்டியாளர்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். கமல்ஹாசன் தற்போது ‘தக் லைஃப்’, ’கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.

 

 

Comments