Offline
17,000 பேர் மலேசியாவுக்குள் நுழைய சிறப்பு அனுமதி தர வேண்டும்: வங்காளதேசம் வேண்டுகோள்
News
Published on 06/05/2024

கோலாலம்பூர்:

வங்காளதேசத்தைச் சேர்ந்த 17,000 பேரை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று அந்நாடு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த 17,000 பேருக்கும் முன்னதாக மலேசியாவில் வேலை செய்வதற்கான வேலை அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த மே 31ஆம் தேதிக்குள் மலேசியாவுக்குள் அவர்கக் வந்தாக வேண்டும் என்று அரசாங்கம் காலக்கெடு விதித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த வாரம் திடீரென வெளிநாட்டு ஊழியர்கள் மலேசியாவுக்கு வருவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்தது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவர்களுடைய ஆவணங்களை பரிசீலித்து நாட்டுக்குள் அனுமதிக்க அதிக மனிதவளம் தேவைப்பட்டதாகவும் முன்னர் செய்திகள் வெளிவந்தன.

எனினும் இன்னமும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் காலக்கெடுவுக்குள் மலேசியாவுக்குள் நுழைய முடியவில்லை என்று வங்காளதேசத்தின் அனைத்துலக ஆள்சேர்ப்பு அமைப்பான (பிஏஐஆர்ஏ) கடந்த வாரம் கூறியது.

இந்த நிலையில் வங்காளதேசத்தின் வெளிநாடுவாழ் குடிமக்களின் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சரான ஷோஃபிக்கர் ரஹ்மான் சவுத்ரி கூறுகையில், மலேசியாவுக்குள் தம்நாட்டு தொழிலாளர்கள் நுழைய ஒரு முறை சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக ‘ஃபிரி மலேசியா டுடே’ தெரிவித்தது

இத்தகைய ஊழியர்களின் எதிர்காலம் கோலாலம்பூரில் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்தான் இருக்கிறது என்றார் அவர்.

 

 

Comments