Offline

LATEST NEWS

வரலாற்று சிறப்புமிக்க 3-வது வெற்றி’ – மோடிக்கு மொரீசியஸ் பிரதமர் வாழ்த்து
Published on 06/06/2024 02:50
News

இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ‘இந்தியா’ கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மத்தியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வரலாற்று சிறப்புமிக்க 3ஆவது வெற்றியை பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மோடியின் தலைமையில் மிகப்பெரிய ஜனநாயகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும். மொரிஷியஸ்-இந்தியா கூட்டுறவு என்றும் நிலைத்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Comments