லண்டன்:
லண்டன் நகரைத் தலைமையகமாகக் கொண்ட டைம்அவுட் சஞ்சிகை, உலகின் தலைசிறந்த உணவகங்களைக் கொண்ட நகரங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகள் குறித்த அறிக்கையை கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரே தலைசிறந்த உணவகங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இரண்டாவது, மூன்றாவது இடங்களை முறையே தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க், பெரு நாட்டின் லிமா நகரமும் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் வியட்னாமின் ஹோ சி மின் நகரமும் ஐந்தாவது இடத்தை சீனாவின் பெய்ஜிங்கும், ஆறாவது இடத்தை தாய்லாந்தின் பேங்காக் நகரும் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் 7வது இடத்தையும் பிடித்துள்ளன.
எட்டாவது இடத்தைப் பிடித்தது மும்பை. அதையடுத்து துபாய் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.