Offline

LATEST NEWS

டெல்லி விரைந்த ரஜினிகாந்த்… மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு?
Published on 06/07/2024 02:38
Entertainment

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசரபயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.

அவரது டெல்லி பயணத்துக்குக் காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றதற்கு அதன் தலைவரும் தனது நண்பருமான தமிழக முதல்வருமானமு.க.ஸ்டாலினுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Comments