Offline

LATEST NEWS

சிங்கப்பூரின் சாந்தி பெரேராவுக்கு மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது
Published on 06/07/2024 02:41
News

சிங்கப்பூர் விளையாட்டு விருதுகளில் தேசிய ஓட்டப் பந்தய வீராங்கனையாக சாந்தி பெரேரா உயரிய விருதைப் பெற்றுள்ளார். 2023ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை சாந்தி தட்டிச் சென்றார். அதேபோல் ஆண்டின் ஆகச் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதைப் பெற்றார் குன்யா.

இருவரும் சென்ற ஆண்டு மிகச் சிறப்பாகச் செய்ததற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விருதுகள் நேற்று (ஜூன் 3) வழங்கப்பட்டன. சாந்தி முதன்முறையாக ஆகச் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

அதோடு, 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்விருதை வென்றுள்ள முதல் திடல்தட வீரர் என்ற பெருமையையும் அவரைச் சேரும்.

இந்நிலையில் 2004ல் ஜேம்ஸ் வோங் ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீரர் விருதைக் கைப்பற்றினார்.

Comments