கோலாலம்பூர்:
மின்சார வாகனங்களுக்கான (ZEV) சாலை வரி (LKM) விகிதங்கள் மின்சார மோட்டாரின் சக்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, வரும் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
ZEV வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் தற்போதுள்ள கட்டணத்தை விட புதிய கட்டணம் 85 சதவீதம் குறைவாக இருக்கும் என்று லோக் கூறினார்.
மின்சார வாகனங்களுக்கான அனைத்து கட்டண விகிதங்களும் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், மின் மோட்டார் சக்தி அதிகரிப்புக்கு ஏற்ப கட்டண விகிதம் அதிகரிக்கும். அது தவிர மின்சார மோட்டார் சக்தியின் அதிகரிப்பு வாகனத்தின் கொள்முதல் விலை, அளவு, பிரிவு மற்றும் எடை ஆகியவற்றின் அதிகரிப்பும் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.