Offline

LATEST NEWS

சிலாங்கூர் எஃப்சி வெற்றி வாகை சூடியது
Published on 06/07/2024 02:51
Entertainment

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆர்சிதிஐ கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிலாங்கூர்  எஃப்சி அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் அந்த அணி பெர்சிஜார் ஜாகர்த்தா அணியை எதிர்கொண்டு விளையாடியது. ஆட்டத்தின் 4ஆவது நிமிடத்திலேயே சிலாங்கூர் அணியினர் ஒரு கோல் புகுத்தினர்.

எல்வின் ஃபோர்சேஎஸ்  அந்த வெற்றிக்கோலை  புகுத்தினார். அதன் பின்னர் கோல் புகுத்த இரு அணிகளும் பல முயற்சிகளை மேற்கொண்டன.  ஆனால் அவை வெற்றி பெறவில்லை. இறுதியில் ஆட்டம் சிலாங்கூர் அணிக்குச் சாதகமாக முடிந்தது.

இந்நிலையில் சிலாங்கூர் அணியைச் சேர்ந்த சில ஆட்டக்காரர்களுக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் மற்ற விளையாட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினோம். அவர்கள்  தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்று பயிற்றுநர் நிட்ஸாம்  கமில் கருத்துரைத்தார்.

 

Comments