Offline
ஊழல் மற்றும் நம்பிக்கை துரோகத்தை நிறுத்துங்கள் என்கிறார் அன்வார்
News
Published on 06/10/2024

நாடு கோடிக்கணக்கான ரிங்கிட்டை இழக்கச் செய்யும் ஊழல் செயல்கள் நிகழாமல் இருந்தால், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையில் அதிகாரமளித்தல் பெரிய ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். திவெட் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும், வளர்ச்சியடைவதற்கும் பெரும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் தவறான நடத்தை மற்றும் நம்பிக்கைத் துரோகச் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார் அன்வார்.

TVET உபகரணங்களை வாங்கும் போது 40 மில்லியன் ரிங்கிட்டில் 5 மில்லியன் ரிங்கிட்ட துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்த தைரியமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்… அல்லது வெள்ளம் தணிக்கும் திட்டம் 1 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தால் அதில்  200 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த துரோகம் நிறுத்தப்பட வேண்டும். நாம் பணத்தை மக்களுக்கு திருப்பித் தர முடியும். மக்கள் ஏன் நம் மீது கோபப்படுகிறார்கள். ஏன் ஊழல் … ஊழல், முறைகேடு என்று பேசுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். ஆம், இதனால்தான் எங்களுக்கு இப்போது பணம் கிடைப்பது கடினம்.

நாட்டைக் காப்பாற்றுவதற்காக மக்களின் உரிமைகளைத் திருடுபவர்களைத் தேடிக் கைது செய்யுமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கூறியதாக அவர் கூறினார். அன்வார் இன்று கோல லங்காட்டில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் தேசிய TVET நாள் 2024 கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தார்.

Comments