Offline
மோடி பிரதமராக பதவியேற்பு விழா – முன்னேற்பாடுகள் தீவிரம்
News
Published on 06/10/2024

நாளை ஜூன் 9 ஆம் தேதி மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் இருக்கைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி அரசு நாளை மறுநாள் (ஜூன் 9) மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்க உள்ளது. மோடியுடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளகையில் மோடி பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மோடி பதவியேற்பு விழாவில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதேபோல் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள் என பல்வறு துறைகளை சேர்ந்த ஏராளமானோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு மதத் தலைவர்கள் 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உத்தராகண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டவர்கள், நாடாளுமன்றம் கட்டிய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பத்ம பூஷண், பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், பழங்குடியின பெண்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களை தவிர பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபிஃப், பூடான் மன்னர் உ,ள்ளிட்ட உலகத் தலைவர்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

Comments