Offline
இனி எல்லாம் மாறப் போகுது; பிரபாஸின் அதிரடி அறிவிப்பு!
Published on 06/10/2024 04:38
Entertainment

நடிகர் பிரபாஸ் தான் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகிறது என்பது குறித்து அறிவித்துள்ளார்.

நடிகர் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் பான் வேர்ல்ட் படமாக ‘கல்கி 2898 ஏடி’ உருவாகி இருக்கிறது. அடுத்த மாத இறுதியில் இந்தப் படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் புரோமோஷனைப் படக்குழு தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

படத்தில் பிரபாஸூடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் புஜ்ஜி என்ற காரும் பயணித்துள்ளது. இந்த காரையும் பொதுமக்கள் மத்தியில் சமீபத்தில் சென்னையில் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தார்கள். இப்போது, படத்தின் டிரெய்லர் ஜூன் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உலகம் காத்திருக்கிறது. இனிமேல், எல்லாம் மாறப்போகிறது’ என டிரெய்லர் குறித்து நடிகர் பிரபாஸூம் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார். படத்தின் கதை மகாபாரத்தில் இருந்தே தொடங்குவதாக இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொல்லி இருந்தார்.

இந்தப் படத்தில் 15 நிமிடங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். இதற்காக அவர் சுமார் ரூ. 20 கோடி சம்பளம் வாங்கினார் என்ற விஷயமும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Comments