Offline
டீசல் விலை லிட்டருக்கு 3.35 ரிங்கிட் என நிர்ணயம்
News
Published on 06/10/2024

புதிய டீசல் விலையை லிட்டருக்கு 3.35 ரிங்கிட் என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்று இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அஜிசன் தெரிவித்தார். இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இது மானியம் இல்லாத சந்தை விலையாகும். இது மே 2024 இன் சராசரியின் அடிப்படையில், தானியங்கி விலை நிர்ணயிக்கப்பட்டதாகும்.

B40 பிரிவைச் சேர்ந்த 30,000 தனியார் டீசல் வாகன உரிமையாளர்கள் நாளை புடி மதனி மானியத் திட்டத்தின் கீழ் 200 ரிங்கிட்  பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். விலை நிலையற்ற தன்மையை தடுக்க அரசாங்கம் நிலைமையை கண்காணிக்கும். தற்போது வருடத்திற்கு 4 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் கசிவின் இழப்பை குறைக்க முடியும்  என்று  நம்புவதாக அமீர் கூறினார்.

Comments