கோலாலம்பூர்:
2022 டிசம்பர் 31 முதல் 2024 ஜூன் 10 வரை டிங்கி நோயாளிகளின் எண்ணிக்கை 235.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, 2024 ஆம் ஆண்டின் இக்காலப்பகுதியில் 67,775 டிங்கி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், 2023 இல் இதே காலகட்டத்தில் 51,331 சம்பவங்களும், 2022 இல் 20,194 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 2024 இல் இதுவரை மொத்தம் 48 டிங்கி காய்ச்சல் தொடர்பான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே சமயம் 2023 ஜூன் 10 வரை 37 இறப்புகள் பதிவாகியுள்ளன.