Offline

LATEST NEWS

ஜோகூரில் கோவிட்-19 தொற்று சம்பவங்கள் சடுதியாக அதிகரிப்பு
Published on 06/13/2024 02:31
News

கடந்த 8 வாரங்களில் பதிவான கோவிட்-19 தொற்று சம்பவங்களின் அடிப்படையில், அங்கு கோவிட்-19 தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை சடுதியான அதிகரிப்பைக் காட்டுகிறது.

இம்மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மொத்தம் 263 கோவிட்19 பாதிப்புகள் அங்கு பதிவாகியுள்ளது என்றும், அதற்கு முந்திய வாரத்தில் 249 சம்பவங்களும் பதிவாகியிருந்தன என்று , மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.

ஏப்ரல் 15 முதல் 21 வரை 109 கோவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேநேரம் அதற்கு முந்திய வாரம் 34 சம்பவங்கள் மட்டுமே பதிவாயின என்றும் அவர் சொன்னார்.

எனவே அனைவரும் தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்குமாறும், கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Comments