சிங்கப்பூரில் இருந்து பெரிய அளவில் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன்பேரில், சுங்க அதிகாரிகளின் தனிப்படையினர், காலையில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான பயணிகளையும் கண்காணித்து வந்தனர்.
இதை கண்காணித்துக் கொண்டிருந்த சுங்க அதிகாரிகள், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் வைத்திருந்த பார்சலை வாங்கி, பிரித்துப் பார்த்தனர். பார்சலுக்குள் தங்க கட்டிகள் இருந்தது தெரிந்தது.
உடனடியாக சுங்க அதிகாரிகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியரையும், இலங்கை பயணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அந்த பார்சலில் மொத்தம் 13.5 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ₹8.5 கோடி. மேலும் இலங்கை பயணி, சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர். இவர் சிங்கப்பூரில் இருந்து இந்த தங்க கட்டிகளை கடத்திக் கொண்டு வருவார். பின்னர், சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியரிடம் இந்த தங்க கட்டிகளை கொடுத்து, சுங்கச் சோதனை இல்லாமல், வெளியில் எடுத்துச் சென்று, தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஆசாமியிடம் ஒப்படைக்க கொடுத்துவிட்டு, இலங்கை பயணி, விமானத்தில் துபாய் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார்.
மேலும், இந்த கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் வெளிப்பகுதியில், இண்டிகோ ஊழியரிடம் இருந்து வாங்கி செல்வதற்காக வந்திருந்த கடத்தல் ஆசாமி யார், என்றும் சுங்கத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.