Offline

LATEST NEWS

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு; 41 பேர் இந்தியர்கள்!
Published on 06/14/2024 20:10
News

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் பாிதாபமாக உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவியது. தீயில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் பலர் தப்பித்து வெளியே ஓடினர். ஆனால், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். தங்களைக் காப்பாற்றும் படி அவர்கள் சத்தம் போட்டனர்.

இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். தீ விபத்து ஏற்பட்டவுடன் சிலர் தப்பிப்பதற்காக மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

Comments