கால்பந்து உலகின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி கைலியன் எம்பாப்பே சொன்ன கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வென்ற கேப்டனான லியோனல் மெஸ்ஸி, தனது முன்னாள் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வீரர் கைலியன் எம்பாப்பேவின் சமீபத்திய கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெர்மனியில் 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக கருத்து தெரிவித்த எம்பாப்பே, “உலகக் கோப்பையை விட யூரோக்கள் மிகவும் சிக்கலானது, வெற்றி பெறுவது மிகவும் சிக்கலானது என்று நான் கருதுகிறேன். உண்மையை சொல்லப்போனால், யூரோக்கள் மிகவும் கடினமானது என்றார் எம்பாப்பே.
இவரின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு எம்பாப்பே கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு கருத்து தெரிவித்து சர்ச்சையானது. அப்போது அவர், தென் அமெரிக்க அணிகளைப் பார்த்து, “தென் அமெரிக்காவில், கால்பந்து ஐரோப்பாவைப் போல முன்னேறவில்லை, அதனால்தான் கடந்த உலகக் கோப்பைகளில் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் இருந்தது என்று கூறினார்.
ஆனால் அதே ஆண்டு கத்தாரின் தோஹாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் மூன்றாவது உலகப் பட்டத்தை வென்றது மெஸ்ஸி அண்ட் கோ தான். இந்நிலையில் எம்பாப்பே சொன்ன கருத்தும் அதற்கு மெஸ்ஸி கொடுத்த பதிலடியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது யூரோ கோப்பையை சூடுபிடிக்க செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். கண்டிப்பாக இந்த யூரோ கோப்பை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத ஒரு தொடராக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.