Offline

LATEST NEWS

கேளிக்கை விடுதியில் அடிதடி; ஒருவர் மரணம், மற்றொருவர் காயம்
Published on 06/17/2024 04:45
News

கோத்தா கினாபாலு:

கோத்தா கினபாலுவிலுள்ள ஜாலான் பண்டாரான் பெர்ஜாயாவில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட கைகலப்பில் ஆடவர் ஒருவர் மரணமடைந்தார். மற்றொருவர் காயமடைந்து மருத்துமனையின் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்தது.

இச்சம்பவம் குறித்து கேளிக்கை மையத்தில் பணி புரியும் ஒருவர்போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், கருத்து வேறுபாடு காரணமாக இக்கைகலப்பு நடந்துள்ளது என்று கண்டறியப்பட்டது.

இச்சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு இலக்கான 20 வயது ஆடவர் மரணமடைந்தார். மற்றொரு 20 வயது ஆடவர் குயின் எலிசபெத் மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று,

கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் காசிம் மூடா தெரிவித்தார்.

Comments