Offline
ஜோகூரில் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குற்றவாளிகள் என நம்பப்படும் இருவர் மரணம் !
Published on 06/17/2024 04:57
News

ஜோகூர்:

நேற்று மாலை ஜாலான் அபாத்தில், காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என நம்பப்படும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாலை 5.04 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சம்பவத்தில் 42 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், எம்பிவி காரில் இருந்த மற்றொரு நண்பருடன் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது என்று, ஜோகூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் எம் குமார் கூறினார்.

ஆரம்ப விசாரணையின் விளைவாக, 42 வயதான சந்தேக நபருக்கு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட 38 குற்றப் பதிவுகள் இருந்து கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் மற்றொரு சந்தேக நபரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் சொன்னார்.

மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Comments