Offline
சிங்கையில் வாடகை வீட்டு வசதி தொடர்பான விளம்பரங்கள் Airbnb யில் இருந்து அதிரடி நீக்கம்!
Published on 06/17/2024 05:11
News

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளிலும், கூட்டுரிமை வீடுகளிலும் இரண்டு மூன்று நாட்களுக்குத் தங்கும் வாடகை வசதி இருப்பதாக வந்த விளம்பரங்களை Airbnb தளம் நீக்கியிருக்கிறது.

அதுபோன்ற 15க்கும் அதிகமான விளம்பரங்கள் இருந்ததை CNA பார்த்ததாகவும், குறித்த விளம்பரங்கள் பல மாதங்கள் வரை அந்த தளத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

அதுபற்றி CNA விசாரித்தபோது Airbnb பேச்சாளர் உள்ளூர்ச் சட்டத்தை மதித்து நடக்கும்படி அதன் வாடிக்கையாளர்களிடம் கூறியதாகச் சொன்னது.

தளத்தில் உள்ள அத்தகைய விளம்பரங்களை நீக்கச் சொல்லிவிட்டதாகவும் அது தெரிவிதத்தது.

சிங்கப்பூரில் தனியார் வீடுகளை மூன்று மாதத்துக்குக் குறைவாக வாடகைக்கு விட முடியாது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை 6 மாதத்துக்குக் குறைவாக வாடகைக்கு விடுவதும் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments