Offline
Menu
10 நாளில் 50 கோடி வசூல்.. ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த கருடன்
Published on 06/18/2024 01:34
Entertainment

2024 மே 31-ல் வெளியான கருடன் திரைப்படம் 10 நாளில் 50 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் 2024-ல் வெளியான லால் சலாம் பட மொத்த வசூலையும் இப்படம் முந்தி சாதனை படைத்திருக்கிறது.

இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி – திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று புகழ் பெற்றுள்ளது. கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.

Comments