Offline
டாடா இயக்குநருடன் விரைவில் கைகோர்க்கும் ஜெயம் ரவி
Published on 06/21/2024 01:17
Entertainment

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயம் ரவி. இவர் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் “காதலிக்கநேரமில்லை” படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், டாடா பட இயக்குநர்கணேஷ்பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாடா படத்தை போன்றே வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகும் எனசொல்லப்படுகிறது. கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த ‘டாடா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமானரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments