நாள்தோறும் 5 முறை தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று புனித மெக்காவுக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என்பது. ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா, மதீனாவுக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக, பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. தியாக திருநாளைக் கொண்டாடும் வகையில் புனித நகரமான மெக்காவில் இந்த ஆண்டு 15 லட்சம் பேர் வரை திரண்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெப்பத் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மெக்கா நகரில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகிறது. இதனால், ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்கள் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக, நீர்ச்சத்து இழந்து பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை நிலவி வருவதால், அதைத் தாக்குப்பிடிக்கும் வகையில், மக்கள் அதிகப்படியான நீர் பருகவும், நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெப்பத் தாக்கத்தில் சிக்குவோரை காப்பதற்காக, மெக்கா நகரைச் சுற்றி மருத்துவக் குழுவினர் இருக்கின்றனர். மேலும், சுகாதார மற்றும் முதலுதவி தன்னார்வலர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும், ஹஜ் பயணத்தின்போது வெயிலின் கொடுமையால் இதுவரை 550 பயணிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.