கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியா மற்றும் சரவாக்கின் பல பகுதிகளில் இன்று நண்பகல் (12 மணி) முதல் இடியுடன் கூடிய பலத்த மழை, மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வானிலையை லங்காவி (கெடா), தாங்காக், மூவார், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு (ஜோகூர்) ஆகிய இடங்களில் நிலவும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பெர்லிஸ், கெடா, பினாங்கு, நெகிரி செம்பிலான், பகாங், திரெங்கானு மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு “மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் 3.5 உயரம் வரை அலைகள் எழும்புவதால் சிறிய படகுகளுக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் ” என்றும் அது இன்று அறிவுறுத்தியுள்ளது.