10ஏ மற்றும் மேலான மதிப்பெண் பெற்ற எஸ்பிஎம் மாணவர்கள் எந்த பின்னணியில் இருந்தாலும், மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடம் பெறுவார்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக பிரதமர் கூறினார்.
நம்முடைய எல்லா பிள்ளைகளும், நான் பிள்ளைகள் என்று சொல்லும்போது, மலாய், சீன, இந்திய, தயக், கடாசன் மற்றும் விதிவிலக்கு இல்லாமல் அனைவரையும் குறிக்கிறேன். நம் பிள்ளைகள் 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றாலோ அல்லது சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாலோ, விதிவிலக்கு இல்லாமல், அவர்கள் இடம் பெறுவார்கள். இது அரசாங்கத்தின் உத்தரவாதம்.
இனிமேல் இனப்பிரச்சினை எழக்கூடாது என்று வியாழன் (ஜூன் 27) புக்கிட் ஜாலில் தேசிய பயிற்சி வாரம் 2024 நிறைவு விழாவில் அவர் கூறினார். தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய இந்த துணிச்சலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த முடிவின் விவரங்களை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் திங்கள்கிழமை (ஜூலை 1) அறிவிப்பார் என்றும் அன்வார் கூறினார்.