Offline
வீட்டுக்காவலில் இருக்க கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!
News
Published on 07/03/2024

கோலாலம்பூர்:

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் முகமட் ஷாஃபி அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மலேசியாவின் முன்னாள் பேரரசர் அப்துல்லா அகமட் ஷா தலைமையிலான அரச மன்னிப்புக் குழு, நஜிப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 12 ஆண்டு சிறைத் தண்டனையைப் பாதியாகக் குறைத்தது.

இந்நிலையில், எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தைச் சிறையில் இல்லாது, வீட்டுக்காவலில் தம்மை வைத்திருக்க நஜிப் விண்ணப்பம் செய்திருந்தார்.

இதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஷஃபி அப்துல்லா கூறினார்.

SRC வழக்கில் ஊழலில் ஈடுபட்டதற்காக நஜிப் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments